இந்தியாவில் 5 ஆண்டுகளில் சிங்கம் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிப்பு

 

இந்தியாவில் 5 ஆண்டுகளில் சிங்கம் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது உலகில் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளிலும் மட்டுமே சிங்கங்கள் காணப்படுகின்றன. இதில் ஆசிய வகை சிங்கங்கள் உலகிலேயே குஜராத்தில் மட்டும் தான் உள்ளன. பல்வேறு காரணங்களால் ஆசிய சிங்க இனம் பெருமளவு அழிவை சந்தித்ததை தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் சிங்கங்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன. இதன் விளைவாக படிப்படியாக சிங்கத்தின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு சிங்கங்களின் எண்ணிக்கை 503-ஆக இருந்தது.

ttn

இந்த நிலையில், தற்போது மீண்டும் சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் வசிப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிங்கங்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சிங்கங்கள் வசிக்கும் கிர் காடுகள் 22 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவை தங்களுடைய வசிப்பிடத்தை அதிகரித்து வருகின்றன.