இந்தியாவில் 41% பால் தரமற்றவை ! அதிர்ச்சி தகவலை வெளியிட்டது உணவு பாதுகாப்பு ஆணையம் !

 

இந்தியாவில் 41% பால் தரமற்றவை ! அதிர்ச்சி தகவலை வெளியிட்டது உணவு பாதுகாப்பு ஆணையம் !

இந்தியா 41 சதவீத பால் தரமற்று விற்பனை செய்யப்படுவதாகவும், உடலுக்கு தீங்க விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியா 41 சதவீத பால் தரமற்று விற்பனை செய்யப்படுவதாகவும், உடலுக்கு தீங்க விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆய்வு நடத்தியபின் இந்த தகவலை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

41% பால் மாதிரிகள் குறைந்தபட்ச தரத்துடன் கூட இல்லை எனவும், 7% பால் மாதிரிகள் குடிக்க உகந்ததாக இல்லாமல் குடிப்பவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கிழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 6,432 பால் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வில் 368 மாதிரிகளில் (5.7%) Aflatoxin M1 குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமாக இருந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். Aflatoxin M1 என்பது ஒரு வகையான பூஞ்சை. இது டெல்லி, தமிழ்நாடு, கேரளாவில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் அதிக அளவில் கலந்திருப்பதாக இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

cowmilk

1.2 சதவீத பால் மாதிரிகளில் ஆண்டிபயாடிக் கலந்திருப்பதாகவும், இதன் அடிப்படையில் 7 சதவீத பால் மாதிரிகள் குடிக்க உகந்தவை அல்ல என்பதும் 77 சதவீத பால் மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஆண்டிபயாடிக் அதிகளவில் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

கேரளாவில் ஒரு பால் மாதிரியில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பால் தர நிர்ணயத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அவசியம் என தற்போது உணர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்ப ஆணையம் தெரிவித்துள்ளது.