இந்தியாவில் 40 சதவீத அரசுப் பள்ளிகளில் இந்த வசதிகள் இல்லை – விபரம் உள்ளே!

 

இந்தியாவில் 40 சதவீத அரசுப் பள்ளிகளில் இந்த வசதிகள் இல்லை – விபரம் உள்ளே!

இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுமார் 40 சதவிகித அரசு பள்ளிகளில் முக்கியமான சில வசதிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுமார் 40 சதவிகித அரசு பள்ளிகளில் முக்கியமான சில வசதிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுமார் 40 சதவிகித அரசு பள்ளிகளில் முக்கியமான இரு வசதிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகள் குறித்த அறிக்கையை கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு சமர்ப்பித்துள்ளது. அதில் தான் இந்த விபரம் தெரிய வந்துள்ளது. அதன்படி 2017-2018-ஆம் ஆண்டு கணக்குப்படி நாட்டில் 56 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தில் சுமார் 20 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது.

ttn

அதேபோல நாட்டில் சுமார் 57 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு திடல் உள்ளது. ஒடிசா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சுமார் 30 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு வசதி உள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை சுமார் 72 சதவிகித பள்ளிகளில் விளையாட்டு திடல் வசதி உள்ளது. நாட்டில் சுமார் 40 சதவிகித பள்ளிகளுக்கு சுற்றுச் சுவரே இல்லை என அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.