இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

 

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லி: இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 60 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இதில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலியை சேர்ந்த 16 பேர் அடக்கம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் கேரளாவில் மூன்று பேர் மற்றும் டெல்லியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த விவரங்களை தெரிவித்தார்.