இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு கொரோனா உறுதி

 

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒரேநாளில் நிகழ்ந்த அதிகட்ச கொரோனா நோய்த் தாக்க எண்ணிக்கை இதுவாகும். இந்தியாவில் கொரோனா தொற்றால் மொத்தம் 3,029 பேர் இறந்துள்ளதாகவும், இதுவரை நாட்டில் 96,169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

ttn

நாடு தழுவிய ஊரடங்கின் நான்காவது கட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிலையில் ஒரேநாளில் அதிக பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுக்க சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஏராளமானோர் முன்னணியில் நின்று மக்களிடையே கொரோனா பரவாமல் இருக்க போராடி வருகிறார்கள்.