இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்

 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கும் என இங்கிலாந்தின் சர்வதேச ஆலோசனை நிறுவனமான யர்னஸ்ட் யங் அமைப்பு கணித்துள்ளது

லண்டன்: இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கும் என இங்கிலாந்தின் சர்வதேச ஆலோசனை நிறுவனமான யர்னஸ்ட் யங் அமைப்பு கணித்துள்ளது.

இங்கிலாந்தின் சர்வதேச ஆலோசனை நிறுவனமான யர்னஸ்ட் யங் (ernst young) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் வேகமான இணைய சேவையை வழங்க உதவுவதுடன், புதிய செயலிகளையும் பயன்படுத்துவதற்கு ஆதாரமாக அமையும். இதனால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு கணிசமாக அதிகரிக்கும்.

இதன் காரணமாக, இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் எண்ணிக்கை வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 65 கோடியை எட்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் திறன் இந்தியாவிடம் உள்ளதால் கூடுதலாக 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.