இந்தியாவில் வெளவால்களுக்கு கொரோனா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

 

இந்தியாவில் வெளவால்களுக்கு கொரோனா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

சீனாவின் வுகான் நகரில் உள்ள கடல் உணவுகள் சந்தையில் வெளவால் இறைச்சி மூலமாகவே கொரோனா வைரஸ் மனிதனுக்கு பரவியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், சீனா இதுவரை அதை உறுதிப்படுத்தவில்லை.

சீனாவின் வுகான் நகரில் உள்ள கடல் உணவுகள் சந்தையில் வெளவால் இறைச்சி மூலமாகவே கொரோனா வைரஸ் மனிதனுக்கு பரவியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், சீனா இதுவரை அதை உறுதிப்படுத்தவில்லை. அதன்பின் சந்தையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வுகான் வைரஸ் ஆய்வு நிலையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனையும் சீனா திட்டவட்டமாக மறுத்தது. 

bats

இந்நிலையில் சீனாவின் வுகான் நகரிலுள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தினர் குகைகளில் வாழும் வெளவால்களுக்கு கொரோனா வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் இந்தியாவில் வெளவால்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு நடத்தியது. பரிசோதனையில் தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வெளவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.