இந்தியாவில் வெறும் ரூ.4,999 விலையில் 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்

 

இந்தியாவில் வெறும் ரூ.4,999 விலையில் 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமி இன்ஃபர்மேடிக்ஸ் எனும் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. விலை குறைவு என்றாலும் இந்த புதிய டிவி மாடலின் சிறப்பம்சங்கள் முன்னணி பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் ஊரக பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்தவர்களும் ஸ்மார்ட் டிவி அனுபவத்தை பெறச் செய்யும் நோக்கில் இந்த புதிய மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

சமி SM32-K5500 ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்:

32-இன்ச் 1366×786 பிக்சல் ஹெச்.டி. டிஸ்பிளே

10 வாட் ஸ்பீக்கர்கள்

எஸ்.ஆர்.எஸ் டால்பி டிஜிட்டல்

5 பேண்ட் சவுண்ட் தரம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

512 எம்.பி ரேம், 4 ஜிபி மெமரி

ஃபேஸ்புக், யூடியூப் பிரீ-இன்ஸ்டால் ஆப்கள்

இரு ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள்

யு.எஸ்.பி. போர்ட்கள்

ஒரு ஏ.வி. அவுட் போர்ட்

வீடியோ இன்புட் போர்ட்

இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெலிவரி மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணங்கள் தனி ஆகும். சமி நிறுவனத்தின் ஆப் மூலமாக தான் இந்த டிவியை வாங்க முடியும். சமி செயலியில் டிவியை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்போது டெலிவரி செய்ய வாடிக்கையாளரின் இருப்பிட விவரங்கள் கேட்கப்படும். இந்தியா முழுக்க சமி ஸ்மார்ட் டிவியை டெலிவரி செய்வதற்கான கட்டணம் ரூ.1,800 என்றும் இதனுடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் போது மொத்த கட்டணமாக ரூ.8,000 வரை செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.