இந்தியாவில் வு பிரீமியம் டிவி மாடல்கள் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

 

இந்தியாவில் வு பிரீமியம் டிவி மாடல்கள் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

இந்தியாவில் வு பிரீமியம் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி: இந்தியாவில் வு பிரீமியம் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் திரை அளவுகளில் வு பிரீமியம் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவி மாடல்களில் கூகுள் குரோம்காஸ்ட் பில்ட்-இன், 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, 64 பிட் குவாட்கோர் பிராசஸர், டால்பி ஆடியோ, டி.டி.எஸ் ஸ்டூடியோ சவுண்ட் இன்டகிரேஷன், ஆண்ட்ராய்டு டி.வி 9 பை இயங்குதளம், வைஃபை, ப்ளூடூத், ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், யு.எஸ்.பி. போர்ட்கள், லேன், ஆர்.எஃப்., டூயல் கோர் ஜி.பி.யு, ஹெட்போன் ஜாக் மற்றும் ஆப்டிக்கல் ஆடியோ அவுட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற ஆப்கள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

ttn

32 இன்ச் மாடலில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கரும், 43 இன்ச் மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி மாடல் ரிமோட்களில் அமேசான் பிரைம் வீடியோ, கூகுள் பிளே, ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் சேவைகளுக்கான ஹாட் கீ வழங்கப்பட்டுள்ளது. மேலும் வு பிரீமியம் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 10,999 மற்றும் ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவி மாடல்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.