இந்தியாவில் விரைவில் புதிய 65 இன்ச் எம்.ஐ டிவி வெளியாகிறது!

 

இந்தியாவில் விரைவில் புதிய 65 இன்ச் எம்.ஐ டிவி வெளியாகிறது!

இந்தியாவில் விரைவில் புதிய 65 இன்ச் எம்.ஐ டிவி வெளியாகிறது.

டெல்லி: இந்தியாவில் விரைவில் புதிய 65 இன்ச் எம்.ஐ டிவி வெளியாகிறது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் இதுவரை அதிகபட்சமாக 55 இன்ச் அளவில் மட்டுமே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அதை விஞ்சும் வகையில் புதிதாக 65 இன்ச் 4K டிஸ்பிளே கொண்ட எம்.ஐ டிவி மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

தி பிக் பிக்சர்என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய டிவி வீட்டில் இருந்தபடியே திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற திருப்தியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை சுமார் 60,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் ஜிஎஸ்டி-யின் விலை குறைப்பால் சியோமி நிறுவனத்தின் சாதனங்களின் விலையும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.