இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

 

இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளை (பிப்.27) ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது. இத்துடன் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் விலையை இந்தியாவில் அதிரடியாக குறைத்துள்ளது. பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை சிறப்பு சலுகை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி வெர்ஷன்களின் விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது.

அதனால் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி வெர்ஷன் விலைகள் முறையே ரூ.11,999 மற்றும் ரூ.13,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ இணையதளங்களில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ முக்கிய சிறப்பம்சங்களாக 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி வளைந்த கிளாஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI இயங்குதளம், 12 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, 20 எம்.பி + 2 எம்.பி இரட்டை செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.