இந்தியாவில் யு ஏஸ் ஸ்மார்ட்போன் ரூ.5999 பட்ஜெட் விலையில் அறிமுகம்

 

இந்தியாவில் யு ஏஸ் ஸ்மார்ட்போன் ரூ.5999 பட்ஜெட் விலையில் அறிமுகம்

டெல்லி: மைக்ரோமேக்ஸ் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. யு ஏஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

யு ஏஸ் சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்

பவர் விஆர் ரோக் GE8100 GPU

– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்

– 16 ஜிபி / 32 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம் ஸ்லாட்

– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

யு ஏஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே, எலெக்ட்ரிக் புளு மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 2 ஜிபி ரேம் கொண்ட யு ஏஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜிபி ரேம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் யு ஏஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.