இந்தியாவில் மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

 

இந்தியாவில் மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு

இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பவர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ‘பிக் ஷாப்பிங் டேஸ்’ சிறப்பு விற்பனையில் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே

– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

அட்ரினோ 509 GPU

– 4 ஜிபி ரேம்

– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ

– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்

கைரேகை சென்சார்

– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்படுவதுடன் குறிப்பிட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனுடன் மாதம் ரூ.2,500 வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்தும் வாடிக்கையாளர்கள் புது மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனினை பெற்றுக் கொள்ளலாம்.