இந்தியாவில் மே 21 வாக்கில் கொரோனா 97 சதவீதம் ஒழிந்து விடும் – சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்

 

இந்தியாவில் மே 21 வாக்கில் கொரோனா 97 சதவீதம் ஒழிந்து விடும் – சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்

இந்தியாவில் மே 21 வாக்கில் கொரோனா 97 சதவீதம் ஒழிந்து விடும் என தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்: இந்தியாவில் மே 21 வாக்கில் கொரோனா 97 சதவீதம் ஒழிந்து விடும் என தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று வாழ்க்கைச் சுழற்சி வளைவுகளை மதிப்பிடுவதற்கும், அந்தந்த நாடுகளிலும் உலகிலும் தொற்றுநோய் எப்போது முடியும் என்று கணிப்பதற்கும், மிலன் பாடிஸ்டாவின் குறியீடுகள் மற்றும் இதுவரையிலான தரவுகளை வைத்து சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மே 21 வாக்கில் கொரோனா 97 சதவீதம் ஒழிந்து விடும் அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ttn

அதேபோல, உலக அளவில் மே 29 வாக்கில் 97 சதவீதம் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. உலகளவில் நூறு சதவீதம் கொரோனா ஒழிவதற்கு இந்தாண்டு டிசம்பர் 8 வரை தாமதமாகும் ஆகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்த வலைப்பக்கத்தில் 131 நாடுகளுக்கான கணிப்புகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ttn

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் மே 11-ஆம் தேதி வாக்கில் கொரோனா 97 சதவீதம் ஒழிந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.