இந்தியாவில் மூன்றாம் நிலையை நோக்கி நகரும் கொரோனா வைரஸ்…. தீவிரமடைந்தால் என்னவாகும்?

இந்தியாவில் மூன்றாம் நிலையை நோக்கி நகரும் கொரோனா வைரஸ்…. தீவிரமடைந்தால் என்னவாகும்?

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, இந்தியா திரும்புபவர்களுக்கு, தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுவது, முதல் நிலை தொற்றாக கருதப்படுகிறது.

முதல் நிலை:

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, இந்தியா திரும்புபவர்களுக்கு, தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படுவது, முதல் நிலை தொற்றாக கருதப்படுகிறது.

இரண்டாம் நிலை:

கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து, தொற்றுடன் இந்தியா திரும்பிய நபர், அவரது குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது முன் பின் தெரியாத வேறு ஒருவருக்கோ, தொற்றை பரப்புவது, இரண்டாம் நிலை. இதில், உள்ளூர் நபருக்கு, யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பதை கண்டறிந்து, அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்துவதன் மூலம், பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்த நிலையில் தான், இந்தியா தற்போது உள்ளது.

கொரோனா வைரஸ்

மூன்றாம் நிலை:

 கொரோனா பாதிப்புள்ள நாடுகளுக்கு சென்று வராத, அந்நாடுகளுக்கு சென்றவர்களுடன் தொடர்பில் இருந்திடாத நபருக்கு தொற்று ஏற்படுவதை, மூன்றாம் நிலை என்று அழைக்கின்றனர். இதில், ஒருவருக்கு தொற்று எங்கிருந்து பரவியது என்பதையே கண்டறிய முடியாது. சமூக பரவல் என்ற மூன்றாம் நிலையில், தொற்று மிக வேகமாக பரவும். சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள், தற்போது, மூன்றாம் நிலையில் உள்ளன.

நான்காம் நிலை:

நம் கட்டுப்பாட்டை மீறி தொற்று பரவுவதை, நான்காம் நிலை என்கின்றனர். இது, உச்சகட்ட ஆபத்தான நிலையை ஏற்படுத்திவிடும். சீனா, இந்த நிலையில் இருந்து தான் மீண்டு வந்திருக்கிறது.