இந்தியாவில் முதல் A + + பெற்று தமிழகத்துக்கே பெருமைச் சேர்த்த செய்ண்ட் ஜோசப்ஸ் கல்லூரி!

 

இந்தியாவில் முதல் A + + பெற்று தமிழகத்துக்கே பெருமைச் சேர்த்த செய்ண்ட் ஜோசப்ஸ் கல்லூரி!

மத்திய அரசால் இந்தாண்டு அமைக்கப்பட்ட தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு ஜோசப்ஸ் கல்லூரி மேற்படி தர உயர்வை பெற்றுள்ளது. மனிதவளம், கட்டமைப்பு, நிதிவளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தர உயர்வு கிடைத்துள்ளது.

திருச்சி வளனார் கல்லூரி, (தமிழில் செய்ண்ட் ஜோசப்ஸ் கல்லூரி) ஆரம்பிக்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கையில், A + + தர மதிப்பீடு பெற்ற இந்தியாவின் முதல் தன்னாட்சி கல்லூரி என்ற கூடுதல் பெருமையையும் பெற்றுள்ளது. அப்துல் கலாம், சுஜாதா உள்ளிட்ட மேதைகள் படித்த ஜோசப்ஸ் கல்லூரிக்கு, கடந்த 2000ஆம் ஆண்டு A + தர மதிப்பீடு வழங்கப்பட்டது. மத்திய அரசால் இந்தாண்டு அமைக்கப்பட்ட தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரின் முழுமையான ஆய்வுக்குப் பிறகு ஜோசப்ஸ் கல்லூரி மேற்படி தர உயர்வை பெற்றுள்ளது. மனிதவளம், கட்டமைப்பு, நிதிவளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தர உயர்வு கிடைத்துள்ளது.

St. Joseph's college, Trichy

தர மதிப்பீடு உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் “கல்லூரியில் புதிதாக சட்டப்பள்ளி அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம். திருச்சி தூய வளனார் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு குழு அமைத்து உள்ளோம். A + + தகுதியை இந்தியாவிலேயே முதல் முறையாக பெற்றிருப்பதால் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்” என்றார். கல்லூரி துவங்கி 175 ஆண்டுகள் ஆனாலும், ஆண்களுக்கான கல்லூரியாகவே 150 ஆண்டுகள்வரைக்கும் தொடர்ந்ததுகூட மிக முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தியாவின் முதல் A + + தர மதிப்பீடு பெற்ற கல்லூரி என்ற தமிழகத்தைச் சேர்ந்த தூய வளனார் கல்லூரிக்கு கிடைத்திருப்பது தமிழரின் பெருமை!