இந்தியாவில் முதல் முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி

 

இந்தியாவில் முதல் முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி

இந்தியாவில் முதல்முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கோவை: இந்தியாவில் முதல்முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது போக்குவரத்து போலீசாரின் முக்கிய பணியாக உள்ளது. வெயிலோ, மழையோ விடுமுறையின்றி போக்குவரத்தை கண்ணும் கருத்துமாக ஒழுங்குப்படுத்துவதில் போக்குவரத்து காவல்துறையினரில் பங்கு மகத்தானது.

கோடைக் காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி, சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கும், மழைக்கும் ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது. பணியின் போது இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டுமெனில் கடும் சிரமத்துக்கு போக்குவரத்து போலீசார் ஆளாகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக கோவையில் போக்குவரத்து காவலர்களுக்கு பயோ டாய்லட் உடன் கூடிய நிழற்குடை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸாரின் சிரமங்களைக் குறைக்க தனியார் நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் இந்த டாய்லட் நிறுவப்பட்டுள்ளது.