இந்தியாவில் மத சுதந்திரம்… கடிதம் எழுதிய அமெரிக்க செனட் உறுப்பினர்கள்!

இந்தியாவில் மத சுதந்திரம்… கடிதம் எழுதிய அமெரிக்க செனட் உறுப்பினர்கள்!

இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வர உள்ள நிலையில், இந்தியாவில் மத சுதந்திரம் எப்படி உள்ளது என்று பரிசீலிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கு செனட் உறுப்பினர்கள் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

michale

அமெரிக்க செனட் உறுப்பினர்கள் நான்கு பேர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி உரிமைகள் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதமாக அந்த மாநிலத்தில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினருக்கும் மதச் சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

​ ​அரசியல் காரணங்களுக்காக எத்தனை பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நிலவும் தடைகள் என்ன. அங்கு எந்த அளவுக்கு மதச்சுதந்திரம் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில் அந்நாட்டு செனட் உறுப்பினர்களின் கடிதம் இரு நாட்டுக்கு இடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.