இந்தியாவில் போட் ராக்கர்ஸ் 480 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்; விலை, அம்சங்கள் விவரம் உள்ளே!

 

இந்தியாவில் போட் ராக்கர்ஸ் 480 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்; விலை, அம்சங்கள் விவரம் உள்ளே!

இந்தியாவில் போட் ராக்கர்ஸ் 480 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் போட் ராக்கர்ஸ் 480 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களின் மின்சாதன பொருட்களுக்கு எந்தளவுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதோ, அதைக் காட்டிலும் பல மடங்கு அளவுக்கு விலை குறைந்த மின்சாதன பொருட்களுக்கும் வரவேற்பு உள்ளது. அத்தகைய விலை குறைவான சாதனங்களின் பிராண்டுகளில் போட் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. ஆன்லைன் தளங்களிலேயே அதிகப்படியான விற்பனைகளை செய்துவரும் இந்த ஹெட்போன் பிராண்ட் தனது புதிய வெளியீடாக போட் ராக்கர்ஸ் 480 ஹெட்போன்களை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.1,899 ஆகும். இந்த புதிய ஹெட்போன்கள் தற்போது அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது.

300mAh பேட்டரி திறன் கொண்டிருப்பதால் இந்த ஹெட்போனில் சுமார் 10 மணி நேரம் வரை சார்ஜிங் தாங்குகிறது. ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டுள்ள இதில் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், எல்இடி இன்டிகேட்டர் மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்த கூடிய டிசைன் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பிலாபுன்ட் நிறுவனத்தின் (Blaupunkt) சமீபத்திய ஹெட்போன் மாடலுக்கு போட்டியாக போட் நிறுவனத்தின் இந்த புதிய ஹெட்போன் மாடல் இருக்கும் என்று கருதப்படுகிறது.