இந்தியாவில் புதிய சோனி WH-CH700N வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

 

இந்தியாவில் புதிய சோனி WH-CH700N வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

இந்தியாவில் புதிய சோனி WH-CH700N வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் புதிய சோனி WH-CH700N வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய சோனி WH-CH700N வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் இரைச்சலை குறைக்கும் Noise-Cancelling அம்சம் பிரதானமாக சேர்க்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ தொழில்நுட்பம்) மூலம் இரைச்சல் குறைப்பு பணியை இந்த ஹெட்போன் செய்கிறது. இதற்கென்றே தனியாக ஒரு பட்டனும் இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது. வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போனில் உள்ள DSEE தொழில்நுட்பம் வாயிலாக (Digital Sound Enhancement Engine) குறைந்த குவாலிட்டி கொண்ட மியூசிக் ஃபைல்களை கூட அதிக சப்தத்துடன் வழங்குகிறது. இதில் இடம்பெற்றுள்ள மைக்ரோபோன் மூலம் வாய்ஸ்கால்களை பேச முடிவதோடு, வாய்ஸ் அசிஸ்டென்ட் கட்டளைகளையும் ஏற்று செயல்படுகிறது. இந்த ஹெட்போன் உடன் 1.2 மீட்டர் நீளம் கொண்ட 3.5 எம்.எம் வயரும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சாதாரண வயர் ஹெட்போன் போலவும் இதை பயன்படுத்த முடியும்.

மேலும், ப்ளூடூத் வசதியும் இந்த ஹெட்போனில் உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்த நிலையில் 35 ,மணி நேரங்களுக்கு தொடர்ந்து இயங்கக் கூடியதாக இருக்கிறது. குயிக் சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால் வெறும் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு வரை சார்ஜ் ஆகி விடுகிறது.