இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி!

 

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி!

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கொரோனா’ வைரஸால் உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 450க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் ‘தனிமைப்படுத்தப்பட்டு’ கண்காணிக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கமும், பரவலும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

corona virus

இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடில்லா ஹெல்த்கேர் என்ற மருந்துதயாரிப்பு நிறுவனம் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்நிறுவன் ஈடுபட்டுள்ளது. வைரஸை எதிர்க்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய ஆண்டிஜென் ஒன்றிற்கான டி.என்.ஏ பகுப்பாய்வு குறியீடுகளை ஒரு பாக்டீரியா அல்லது பாலூட்டிகளின் செல்களில் உட்புகுத்து ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இதன் முடிவுகள் தெரியவர நான்கு முதல் ஆறு வார காலங்கள் நமக்கு தேவை எனக் கூறப்படுகிறது.