இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

டெல்லி: இந்தியாவில் ஜன.28-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

பல்வேறு வதந்திகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜன.28-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் சக்தி வாய்ந்த பிராசஸர், டிஸ்பிளே, கேமராக்கள், பேட்டரி ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் சாம்சங் ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. கேலக்ஸி எம் 10, கேலக்ஸி எம் 20, கேலக்ஸி எம் 30 ஆகிய புதிய மாடல்கள் இந்த சீரிஸில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக சியோமி போன்ற சீன போட்டியாளர்களிடம் சாம்சங் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில், இந்தியாவில் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போன்கள் மூலம் மார்கெட்டில் முன்னணி இடத்தை பிடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சாம்சங் மொபைல் போன் விற்பனை 2018-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 373.5 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.