இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க நடவடிக்கை எடுங்கள்! ராமதாஸ் வலியுறுத்தல்!

 

இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க நடவடிக்கை எடுங்கள்! ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.டாக்டர் ராமதாஸ் இன்று சில ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ramadoss

“ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளில் இந்தியா 41-ஆவது இடத்திலிருந்து 51-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. ஜனநாயகத்திற்காக நாம் செய்த தியாகங்களும், கொடுத்த விலையும் அதிகம். ஆகவே, இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும்!

scholl

தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 17% குறைந்திருப்பது அத்தேர்வு முறையில் தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கையும், விருப்பமும் இல்லை என்பதையே காட்டுகிறது. மாணவர்களின் உணர்வுகளை மதித்து நீட் தேர்விலிருந்து  தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்!”

இந்தியாவில் ஜனநாயகம் குறைந்திருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம். அதுவும் பா.ஜ.க கூட்டணியிலிருந்துகொண்டு, ஜனநாயகம் தழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது பா.ஜ.க-வினரை எரிச்சலடைய செய்துள்ளது.