இந்தியாவில் சுனாமி! ஆனால் அதில் தமிழகம் சிக்கவில்லை- வைரமுத்து

 

இந்தியாவில் சுனாமி! ஆனால் அதில் தமிழகம் சிக்கவில்லை- வைரமுத்து

நாடு முழுவதும் மோடியின் சுனாமி அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் தமிழகம் சிக்கவில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் மோடியின் சுனாமி அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் தமிழகம் சிக்கவில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது. 

vairamuthu

இந்நிலையில், இன்று காலை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா முழுவதும் மோடியின் சுனாமி அலைகளால் நனைந்துள்ளது. ஆனால் நனையாத சில மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளாது. இது திராவிட இயக்கத்திற்கும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற கொள்கைவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். இந்த வெற்றியை தமிழர்கள் கொண்டாட வேண்டும், தமிழர்கள் தங்களை காத்துக்கொண்ட பாதுகாப்பு கவசமாக இந்த வெற்றியை கருதுகிறேன்” என தெரிவித்தார்.