இந்தியாவில் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்!

 

இந்தியாவில் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்!

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்தது.

டெல்லி: இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சில நொடிகளில் விற்றுத் தீர்ந்தது.

இந்தியாவில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகிய இவ்விரு ஸ்மார்ட்போன்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்பை வாடிக்கையாளர்களிடையே உருவாக்கியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் முதன் முறையாக விற்பனை தொடங்கப்பட்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஃப்ளாஷ் சேல் மூலமாக சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அந்த வகையில் இன்று மீண்டும் 2-வது முறையாக விற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஒரு மணி நேரத்தில் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்றுத் தீர்ந்தது.

அதைக் காட்டிலும் மிகப் பெரும் ஆச்சர்யம் என்னவெனில், இந்தியாவில் இன்று முதன்முறையாக விற்பனைக்கு வெளியான ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சில நொடிகளிலேயே விற்றுத் தீர்ந்தது. இதனால் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் திரை முன்பு ஆர்வத்துடன் காத்திருந்த எம்.ஐ பிராண்டு வாடிக்கையாளர்கள் மிகப்பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மறுவிற்பனை அடுத்த வாரம் ஃபிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஷோரூம்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, நெபுளா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களிலும், அதேபோல ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சஃபையர் புளு ஆகிய நிறங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 6-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 மாடலும், மார்ச் 13-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலும் ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi இணையதளம் மற்றும் Mi ஹோம் ஷோரூம்களில் விற்பனைக்கு வெளியாகிறது.

விலைப் பட்டியல்:

ரெட்மி நோட் 7 ப்ரோ (4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) – ரூ.13,999

ரெட்மி நோட் 7 ப்ரோ (6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) – ரூ.16,999

ரெட்மி நோட் 7 (3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி) – ரூ.9,999

ரெட்மி நோட் 7 (4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) – ரூ.11,999

ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அட்ரினோ 612 GPU, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர் சென்சார், ஏ.ஐ. போர்டிரெயிட், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதேபோல ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10, டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 2 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார், ஸ்ப்ளாஷ் ப்ரூஃப், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 4 ஆகியவை இடம்பெற்றுள்ளன.