இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஒய்.ஐ ஹோம் கேமரா அதிரடி விலை குறைப்பு – முழு விவரம் உள்ளே

 

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஒய்.ஐ ஹோம் கேமரா அதிரடி விலை குறைப்பு – முழு விவரம் உள்ளே

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஒய்.ஐ ஹோம் கேமரா அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஒய்.ஐ ஹோம் கேமரா அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் ஹோம் செக்யூரிட்டி கேமராவாக ‘ஒய்.ஐ ஹோம் கேமரா’வை கடந்தாண்டு ரூ.2,990 விலையில் அறிமுகம் செய்தது. தற்போது அதன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் இணையதளத்தில் தற்போது ரூ.1,999 விலையில் விற்கப்படுகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,190 விலையில் விற்கப்படுகிறது. இந்த சலுகை விலை ஜனவரி 26, 2019 வரை அமலில் இருக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்.ஐ ஹோம் கேமராவில் 720p ஹெச்.டி ரெக்கார்டிங், இன்ஃபிராரெட் நைட் விஷன் வசதிகள் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் இரவில் கும்மிருட்டில் கூட மூன்று மீட்டர் தொலைவில் உள்ளவற்றை தெளிவாக படம் பிடிக்க கூடியது. மேலும் இதில் 111 டிகிரி வைடு லென்ஸ், 4 மடங்கு ஸூம் வசதி ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளது. ஒய்.ஐ ஆப் மூலம் லைவாக கேமரா பொருத்தப்பட்டுள்ள இடத்தை கண்காணிக்க முடியும். இதில் மைக்ரோபோன் மற்றும் வீடியோ சாட் வசதி உள்ளது. இந்த சாதனம் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.