இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது? – புதிய தகவல்

 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் எப்போது? – புதிய தகவல்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற விவரத்தை சாம்சங் நிறுவனம் ஒரு வழியாக அறிவித்துள்ளது. இன்பினிட்டி ஓ டிஸ்பிளே கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை ரூ.22,990 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் நாளை (ஜனவரி.29) அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதவிர சாம்சங் கேலக்ஸி ஏ71 மாடல் ஸ்மார்ட்போனையும் நாளை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விலை ரூ.29,990 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் இன்பினிட்டி ஓ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் மற்ற நிறுவன மாடல்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.