இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் மீண்டும் அதிரடி விலை குறைப்பு

 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் மீண்டும் அதிரடி விலை குறைப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனபோது அதன் விலை ரூ.36,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ரூ.3000 விலை குறைப்பு செய்யப்பட்டு அதே மாடல் ஸ்மார்ட்போன் ரூ.33,990-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ரூ.30,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடல் கேலக்ஸி ஏ9 (2018) என்பது குறிப்பிடத்தக்கது. புதிய விலையுடன் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி இன்ஃபினிட்டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வகைகள், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 24 எம்.பி + 10 எம்.பி + 8 எம்.பி + 5 எம்.பி நான்கு பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 24 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3800 எம்.ஏ.ஹெச் பேட்டரி, அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.