இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த  தடை !

 

இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த  தடை !

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுத்ததால், இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்த தடைவித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மறுத்ததால், இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்த தடைவித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.

காஷ்மீர் தற்கொலைத் தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டதால் இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட கூடாது என்று சிலர் பேசிவருகிறார்கள்.முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் போன்றவர்களோ அது பெரிய விஷயமல்ல ,உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானோடு விளையாடி அவர்களை தோற்கடிப்பதுதான் சரி என்று பேசிவருகிறார்கள். இந்நிலையில் 
டெல்லியில்  நடந்துவரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளும்  இரு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டது.

இந்த போட்டியை நடத்துவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியாகும்.அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுப் போட்டியில் அரசியல் செய்ததால் எதிர்காலத்தில் இந்தியாவில் எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளையும் நடத்தக்கூடாது என தடை விதித்ததுடன் போட்டிகள் நடத்துவது தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும் ரத்து செய்வதாகவும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு (ஐஓசி) உத்தரவிட்டுள்ளது.

மேலும் டெல்லியில் நடந்து வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் 25 எம் ரேபிட் துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் அந்தஸ்தையும் இந்தியாவுக்கு ஐஓசி அதிரடியாக ரத்து செய்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிஎம். பஷிர், மற்றும் கலில் அகமது ஆகிய இரு வீரர்கள் விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களின் விசாக்களைத்தான் இந்தியா ரத்துச் செய்திருக்கிறது. இதனால் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கேள்விக்குறி ஆகிவிட்டது.