இந்தியாவில் சமூக பரவல் என்ற 3 ஆவது நிலை ஏற்படவில்லை: மத்திய சுகாதாரத்துறை

 

இந்தியாவில் சமூக பரவல் என்ற 3 ஆவது நிலை ஏற்படவில்லை: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் மூன்றாவது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியவுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது நிலையை எட்ட வாய்ப்பு இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் மூன்றாவது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடியவுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது நிலையை எட்ட வாய்ப்பு இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் அதன் இரண்டாம் நிலையான உள்ளூர் பரவல் நிலையில் தான் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்துக்கும், மூன்றாவது கட்டத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக அண்மையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. 

கொரோனா வைரஸ்

இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தியாவில் சமூக பரவல் என்ற 3 ஆவது நிலையை கொரோனா தொற்று எட்டவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. எனினும் விழிப்புடன் இருப்பது நல்லது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனால் ஊர்வலங்கள், திருவிழாக்கள் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.