இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து 5,914 பேர் குணமடைந்துள்ளனர்!

 

இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து 5,914 பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 29லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  8 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 29லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  8 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். இரண்டு லட்சத்து 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடிகரித்துவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

coronavirus

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை  26,496 லிருந்து 26,917 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 826 பேர் உயிரிழந்த நிலையில் 5,914  பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 22% ஆக உயர்ந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.