இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56,300ஆக உயர்வு!

 

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56,300ஆக உயர்வு!

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 17 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டித்து மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

coronavirus

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 103 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1275 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் டெல்லியில் அதிகபட்சமாக 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 5,980 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு இல்லை” எனக்கூறினார்.