இந்தியாவில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை தாண்டியது!

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 64 ஆயிரத்தை தாண்டியது!

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 41 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 41 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசிலிருந்து 14 லட்சத்து 55 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 17 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டித்து மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

coronavirus

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939லிருந்து 64,139 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,358 லிருந்து 19,452 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,114 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,277 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 128பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,109ஆக அதிகரித்துள்ளது.