இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று 20 லட்சத்தை எட்டும் – அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

 

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று 20 லட்சத்தை எட்டும் – அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று 20 லட்சத்தை எட்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று 20 லட்சத்தை எட்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

இம்மாத இறுதிக்குள் நாட்டில் நாளொன்றுக்கு 1 லட்சம் கொரோனா  பரிசோதனைகளை செய்யக் கூடிய நிலையை இந்தியா எட்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார். இந்தியாவில் இன்று 20 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை எட்டும் என்று அவர் தெரிவித்தார்.

ttn

இதுகுறித்து அவர் பேசுகையில் நேற்று நாங்கள் 90 ஆயிரம் கொரோனா மாதிரிகளை பரிசோதித்தோம். நாங்கள் தொடர்ந்து கொரோனா பரிசோதனை திறனை நாட்டில் அதிகரித்து வருகிறோம். மே 31-ஆம் தேதிக்கு முன்னர் நாளொன்றுக்கு 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நாட்டில் செய்யப்படும் நிலையை எட்டுவோம் என்று முன்பு கூறியிருந்தோம். ஆனால் இன்று நாடு முழுவதும் 20 லட்சம் கொரோனா பரிசோதனைகளை எட்டுவோம் என்று மத்திய அமைச்சர் கூறினார்.