இந்தியாவில் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301 ஆக அதிகரிப்பு!

 

இந்தியாவில் கொரோனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301 ஆக அதிகரிப்பு!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 17 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டிக்க மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.   இருப்பினும் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சிவப்பு மண்டலங்களில் இங்கு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  விமானம், ரயில், மெட்ரோ மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது என்றும்  மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. 

 

பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது.  பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 37,776 லிருந்து 39,980 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,633  பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,223 லிருந்து 1,301 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.