இந்தியாவில் கூகுளின் RCS மெசேஜிங் சேவை அறிமுகம்: இனி மெசேஜிலும் இதையெல்லாம் செய்யலாம்!

 

இந்தியாவில் கூகுளின் RCS மெசேஜிங் சேவை அறிமுகம்: இனி மெசேஜிலும் இதையெல்லாம் செய்யலாம்!

எஸ்எம்எஸ்  மட்டுமில்லாமல், படங்கள், வீடியோக்கள்,  க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்றவற்றையும் பயன்படுத்த முடியும்

கூகுள் நிறுவனம் RCS எனும் மெசேஜ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

ஆரம்பக்காலத்தில் செல்போன்கள்  பயன்பாட்டில் எஸ்எம்எஸ் என்பது முக்கிய தேவையாக இருந்தது. ஆனால்  தற்போது  எஸ்எம்எஸ் பயன்பாட்டின் தேவை குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், வங்கி  சேவை உள்ளிட்ட சில வசதிகளுக்காகவே  எஸ்எம்எஸ் சேவை பயன்படுகிறது. இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  சறுக்கலை சந்தித்துள்ளது.

mobile

இந்நிலையில் கூகுள் நிறுவனம்  RCS ( Rich Communication Service ) எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது . இதில் எஸ்எம்எஸ்  மட்டுமில்லாமல், படங்கள், வீடியோக்கள்,  க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்றவற்றையும் பயன்படுத்த முடியும். இவை அனைத்தும் எஸ்எம்எஸ்  பயன்பாட்டின் அடிப்படையிலேயே இருக்கும். இதை enable செய்ய உங்கள் கூகுள் மெசேஜ்  ஆப்பின் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, அதில் ஜென்ரல் பிரிவில் உள்ள சாட் ஃபீச்சர்ஸ் சென்று Enable Chat Features என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.  இந்த சேவை தற்போது சில மொபைல்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில் விரைவில் அனைத்து  ஆன்டிராய்டு போன்களிலும் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.