இந்தியாவில் கடந்த 4 நாட்களில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீள்வோர் எண்ணிக்கையில் முன்னேற்றம்

 

இந்தியாவில் கடந்த 4 நாட்களில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீள்வோர் எண்ணிக்கையில் முன்னேற்றம்

இந்தியாவில் கடந்த 4 நாட்களில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீள்வோர் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் கடந்த 4 நாட்களில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீள்வோர் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன. மிகவும் வேகமாக பரவக் கூடிய தொற்றுநோயான கொரோனாவால் இதுவரை நாட்டில் 437 பேர் உயிரிழந்துள்ளதாக என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 13.06 சதவீதமாகவும், வியாழக்கிழமை 12.02 சதவீதமாகவும், புதன்கிழமை 11.41 சதவீதமாகவும், செவ்வாய்க்கிழமை 9.99 சதவீதமாகவும் இருந்தது.

coronavirus

கடந்த 24 மணி நேரத்தில், 260 நோயாளிகள் கொரோனா நோயில் இருந்து குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது இந்தியாவில் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். வியாழக்கிழமை 183 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்த பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 5 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.