இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 22 ஆயிரத்தை நெருங்கியது!

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 22 ஆயிரத்தை நெருங்கியது!

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 26லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 26லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்  7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மேல் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. 

coronavirus

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21, 393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 28 நாளில் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. கடந்த 30 நாட்களில் 33 மடங்கு பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். இதை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை. நாட்டின் 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. 4257 பேர் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.