இந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா; நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் பாதிப்பு!

 

இந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா; நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய அரசு தீவிர நடவடக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரிசோதனையின் போது, சில சமயங்களில் ரேபிட் கிட்டில் கொரோனா இல்லை என வருவதாகவும் ஆனால் அந்த நபர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் பரிசோதனை நெகட்டிவ் என வந்தாலும் அறிகுறி இருந்தால் அவர்களை கண்டறிந்து மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா; நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் பாதிப்பு!

இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 96,550 பேருக்கு கொரோனா உறுதியானதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45,62,414 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 1,209 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76,271 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 35.42 லட்சம் பேர் குணமடைந்து இருப்பதாகவும் 9.43 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.66% சதவீதமாகவும் குணமடைந்தோர் விகிதம் 77.74% ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.