இந்தியாவில் ஒப்படைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் : நீதிமன்றத்தை மிரட்டிய நிரவ்மோடி!

 

இந்தியாவில் ஒப்படைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் : நீதிமன்றத்தை மிரட்டிய நிரவ்மோடி!

தொழிலதிபர் நிரவ்மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில்  ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பியோடினார்.

தொழிலதிபர் நிரவ்மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில்  ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பியோடினார். அங்கு மாறு வேடத்தில் சுற்றித் திரிந்த நிரவ்மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனால், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு, லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். 

Nirav modi

அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மூன்று முறை மனுத் தாக்கல் செய்தும், அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நிரவ்மோடி புதிதாக மீண்டும் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் மூன்று முறை சிறை கைதிகளால் தாக்கப்பட்டதாகவும், இது குறித்து சிறைத்துறையினரிடம் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Nirav modi

மேலும், இரண்டு மடங்காக கூட, தான் பிணைத் தொகையைச் செலுத்தத் தயாராக உள்ளதாகவும் இந்தியாவில் தன்னை ஒப்படைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை  விசாரித்த லண்டன் நீதிமன்றம் நிரவ்மோடியின் கோரிக்கையை நிராகரித்து, ஜாமீன் வழங்கப் படாது என்று தெரிவித்துள்ளது.