இந்தியாவில் ஐபோன் விநியோகம் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் 55 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பு

 

இந்தியாவில் ஐபோன் விநியோகம் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் 55 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பு

ஆப்பிள் ஐபோன் விநியோகம் இந்தியாவில் 55 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: ஆப்பிள் ஐபோன் விநியோகம் இந்தியாவில் 55 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் விநியோகம் இந்தியாவில் ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் 55 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது விநியோகம் அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விநியோகம் கடந்த இரண்டு மாதங்களில் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை. ஆனால் இனி வரும் மாதங்களில் அதன் தாக்கம் தெரியும் என தொழில் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

ttn

2020 ஜனவரி – பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் விநியோகம் செய்யப்பட்ட மாடல்களில் ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை இருக்கின்றன. ஐபோன் விநியோகம் கடந்த ஆண்டு மத்தியில் அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விநியோகம் 17 சதவீதம் அதிகரித்தது. ஐபோன் விநியோகத்திற்கு ஐபோன் 11 மற்றும் ஐபோன் XR மாடல்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி, விலை குறைப்பு உள்ளிட்டவையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.