இந்தியாவில் எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போன்களின் விலையைக் குறித்த சியோமி!

 

இந்தியாவில் எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போன்களின் விலையைக் குறித்த சியோமி!

இந்தியாவில் எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போன்களின் விலையை சியோமி நிறுவனம் குறைத்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போன்களின் விலையை சியோமி நிறுவனம் குறைத்துள்ளது.

புதிய தலைமுறை ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் சியோமி நிறுவனம் குறைத்துள்ளது. இந்த மாடல் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இது ஒரு ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு வருகிற பிப்ரவரி மாதம் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் சியோமி எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. இதை சியோமி இந்தியா நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் எம்.ஐ ஏ3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி வெர்ஷன் தற்போது ரூ.11,999 விலையிலும், 6 ஜிபி வெர்ஷன் ரூ.14,999 விலையிலும் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் சியோமி இணையதளம் ஆகியவற்றில் இந்த ஸ்மார்ட்போனை புதிய விலையிலேயே வாங்க முடியும். மேலும் ப்ளூ, வொயிட், கிரே ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.