இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்! – மத்திய அரசு உறுதி செய்தது

 

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்! – மத்திய அரசு உறுதி செய்தது

சீனாவில் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு 3000க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது.

இந்தியாவில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீனாவில் வுகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு 3000க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கேரளாவில் சிகிச்சை பெற்ற நபர் உடல் நலம் பெற்றார் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தெலங்கானா மற்றும் டெல்லியைச் சார்ந்த தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் உடல் நிலை சீராக உள்ளது என்றும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.