இந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்

 

இந்தியாவில் இந்த மாதம் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகிறது.

டெல்லி: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன் இந்த மாதம் வெளியாகிறது.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 (2018) ஸ்மார்ட்போன் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகின் முதன் பின்பக்கம் குவாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. மேலும், அதில் பின்புறம் 4 தனித் தனி கேமராக்களை கொண்டுள்ளது.

கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் அதன் டிஸ்பிளே 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. பின்பக்கம் 3டி கிளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது நடுத்தர மாடல்களான ஒன்பிளஸ் 6T போன்று ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐஏஎன்எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A9 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே

ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸசர்

– 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்

– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்

– 24, 10, 8, 5 எம்.பி என 4 பின்பக்க கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்

– 25 எம்.பி செல்ஃபி கேமரா

டூயல் சிம் ஸ்லாட், ஃபேஸ் அன்லாக், விரல்ரேகை சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

– 3800 எம்.ஏ.எச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி A9 விலை பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கடந்த மாதம் மலேசியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்போது 599 யூரோ (தோராயமாக ரூ.51,300 ஆகும்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலும், இது பபூள்கம் பிங், கேவியர் பிளாக், லேமோனேட் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.