இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலை திடீர் உயர்வு

 

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலை திடீர் உயர்வு

குறிப்பிட்ட சில ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி: குறிப்பிட்ட சில ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் பிரின்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10-இல் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியது. அத்துடன் மொபைல் உபகரணங்களான டிஸ்பிளே பேனல், டச் பேனல், மைக்ரோபோன் மற்றும் ரிசீவர் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

apple

இவ்வாறு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில ஐபோன்களின் விலையை இந்தியாவில் திடீரென உயர்த்தியுள்ளது. இதனால் கூடிய விரைவில் ஐபோன் வாங்கவிருந்த வாடிக்கையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் வரும் நாட்களில் ஐபோன் மாடல்களின் விற்பனை பெருமளவு சரிவு காணும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.