இந்தியாவில் ஆன்லைன் விற்பனை: பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளியது அமேசான்

 

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை: பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளியது அமேசான்

இந்தியாவில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை அமேசான் நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளதாக பார்க்லேஸ் வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது

டெல்லி: இந்தியாவில் ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை அமேசான் நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளதாக பார்க்லேஸ் வங்கி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

 உலகின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான அமேசானுக்கும், பிளிப்கார்ட்டுக்கும் இடையே இந்திய சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் காலூன்ற துடிக்கும் வால்மார்ட் நிறுவனம் அண்மையில் வாங்கியது.

இதையடுத்து, இந்திய சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனட்டின் விற்பனை படு ஜோராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் எதிராக, அமேசான் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள பார்க்லேஸ் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், பொருட்கள் விற்பனையில், பிளிப்கார்ட் நிறுவனத்தை, அமேசான் இந்தியா பின்னுக்குத் தள்ளி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், 2016-17-ஆம் நிதியாண்டில், பிளிப்கார்ட் நிறுவனம் 6 ஆயிரத்து 200 மில்லியன் டாலர் மதிப்புக்கு விற்பனை செய்துள்ளதாகவும், அதே காலக் கட்டத்தில் அமேசான் நிறுவனம் 7ஆயிரத்து 500 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நன்னடத்தை குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணைநிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.