இந்தியாவில் அதிவேக 4ஜி கிடைக்கும் நகரங்கள் – ஓபன் சிக்னல் ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

 

இந்தியாவில் அதிவேக 4ஜி கிடைக்கும் நகரங்கள் – ஓபன் சிக்னல் ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

மும்பை: இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

தங்களுடைய ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என்பதே பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஓபன் சிக்னல் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஆச்சர்யம் தரக் கூடியதாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி சராசரியாக அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதமாவது கிடைப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

மேலும் இந்த பட்டியலில் இரண்டு நகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் 95 சதவிகிதத்தை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி இதில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதமாக இருந்து வருகிறது. முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்திருந்தது.