இந்தியாவில் அதிவேக 4ஜி…எந்த நிறுவனம் டாப்? – ஓப்பன் சிக்னல் ஆய்வு முடிவுகள் வெளியீடு

 

இந்தியாவில் அதிவேக 4ஜி…எந்த நிறுவனம் டாப்? – ஓப்பன் சிக்னல் ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் குறித்த பட்டியலை ஓப்பன் சிக்னல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் குறித்த பட்டியலை ஓப்பன் சிக்னல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்கள் குறித்த ஆய்வு முடிவுகளை ஓப்பன் சிக்னல் என்ற நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு ஆய்வு முடிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த 3ஜி மற்றும் 4ஜி டவுன்லோட் வேகம் நொடிக்கு 7.53 எம்.பி. ஆக இருக்கிறது.

மேலும், ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் ஜியோ நொடிக்கு 5.47 எம்.பியும், வோடபோன் 5.20 எம்.பியும், ஐடியா 4.92 எம்.பியும் மற்றும் பி.எஸ்.என்.எல் 2.70 எம்.பியும் டேட்டா வழங்குவதாக தெரிய வந்துள்ளது.

டேட்டா டவுன்லோட் வேகத்தை பொறுத்தவரை ஜூன் 1 முதல் ஆகஸ்டு 29 வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 25 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதன் சராசரி டேட்டா வேகம் நொடிக்கு 9.96 எம்.பி. ஆக பதிவாகி இருக்கிறது. இந்தியா முழுக்க 16 டெலிகாம் வட்டாரங்களில் ஏர்டெல் அதிவேக டேட்டா வழங்கி இருக்கிறது.

அதேசமயம், 4ஜி டேட்டா அப்லோடு வேகத்தை பொறுத்தவரை ஐடியா நிறுவனமே முதலிடத்தை வகிக்கிறது. அதிகபட்சமாக நொடிக்கு 3.93 எம்.பி. அப்லோடு வேகத்தை ஐடியா வழங்கியுள்ளது. பஞ்சாப், டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட வட்டாரங்களில் ஐடியா நிறுவனம் அதிவேக அப்லோட் டேட்டா வேகம் வழங்கியுள்ளது. ஆனால் அப்லோட் டேட்டா வேகத்தை பொறுத்தவரை எந்த டெலிகாம் நிறுவனமும் 4 எம்.பி. வேகத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.