இந்தியாவில் அதிவேகமாக 4ஜி டவுன்லோடு பெறும் நேரம் அதிகாலை 4 மணி: ஓப்பன் சிக்னல் ஆய்வு முடிவுகள் வெளியீடு

 

இந்தியாவில் அதிவேகமாக 4ஜி டவுன்லோடு பெறும் நேரம் அதிகாலை 4 மணி: ஓப்பன் சிக்னல் ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் அதிவேகமாக 4ஜி டவுன்லோடு பெறும் நேரம் அதிகாலை 4 மணி என ஓப்பன் சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் விவரங்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் அதிவேகமாக 4ஜி டவுன்லோடு பெறும் நேரம் அதிகாலை 4 மணி என ஓப்பன் சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் விவரங்கள் வெளியாகியுள்ளது.

உலகளவில் 4ஜி இன்டர்நெட் வேகம் குறித்து ஓப்பன் சிக்னல் நிறுவனம் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் 4.5 மடங்கு அளவுக்கு இரவு நேரங்களில் 4ஜி இன்டர்நெட் டவுன்லோடு வேகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் 20 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 16.8 எம்.பி ஆக உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக நொடிக்கு 6.5 எம்.பி வேகத்தில் மட்டுமே இந்தியாவில் டவுன்லோடு வேகம் உள்ளது. இரவு 10 மணியளவில் அதிக பேர் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த நேரத்தில் 4ஜி வேகம் குறைவாக காணப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக நவி மும்பை பகுதி தான் அதிக டவுன்லோடு வேகத்தை பெற்றுள்ளது. அங்கு சராசரியாக நொடிக்கு 8.1 எம்.பி டவுன்லோடு வேகம் காணப்படுகிறது. அதேபோல நாட்டிலேயே குறைந்தபட்சமாக அலகாபாத் பகுதியில் குறைந்த இன்டர்நெட் வேகம் நிலவுகிறது. அங்கு சராசரியாக நொடிக்கு 4.0 எம்.பி டவுன்லோடு வேகம் உள்ளது. நாட்டிலேயே இரவு நேரங்களில் இன்டர்நெட் வேகம் அதிகமாகவும், பகல் நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது. ஏனெனில், இரவு நேரம் போகப்போக தூங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் அந்த நேரத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. காலை நேரத்தில் மக்கள் எழுந்திருக்கும் நேரம் தொடங்கியதும் இன்டர்நெட் வேகம் குறைய தொடங்குகிறது. ஏனெனில், அப்போது இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்குகிறது.