இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் தலயின் விஸ்வாசம் முதலிடம்!! 

 

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் தலயின் விஸ்வாசம் முதலிடம்!! 

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த விஸ்வாசம் திரைப்படம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாத வெளியான படம் விஸ்வாசம். சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி சுமார் 100 நாட்கள் மேல் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் பாசத்தை வெளிக்காட்டும் விதமான ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. 

இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக்களை தற்போது ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விஸ்வாசம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் மீண்டும் #Viswasam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கின் இரண்டாவது இடத்தில் #Loksabhaelection2019, மூன்றாவது இடத்தில் #CWC19 என்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்துள்ளன.